சீனாவில் வனவிலங்கு பூங்காவில் புலி தாக்கி பெண்னொருவர் பலியான Video
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் பெடாலிங் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு செல்லும் பார்வையாளர்கள் தங்கள் கார்களில் வனப்பகுதியை சுற்றி விலங்குகளை நேரில் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் காரில் இருந்து இறங்கி சுற்றிப்பார்க்க அனுமதி இல்லை.
இந்த நிலையில் 2 பெண்கள், ஒரு ஆண் காரில் சென்றனர். புலிகள் பகுதிக்கு சென்றபோது காரில் இருந்த பெண் திடீரென கதவை திறந்து கீழே இறங்கினார்.
உடனே அங்கு சுற்றி திரிந்த புலிகள் அவர் மீது பாய்ந்து தாக்கியது. அதைப்பர்த்த மற்றொரு பெண் கீழே இறங்கி அவரை காப்பாற்ற முயன்றார்.
உடனே அவரை விட்டு விட்டு 2-வதாக காரில் இருந்து இறங்கிய பெண்ணை சூழ்ந்து புலிகள் தாக்கி காட்டுக்குள் இழுத்து சென்றன. அதற்குள் அங்கு பாதுகாப்புக்கு இருந்த பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் ஓடிவந்தனர். அதற்குள் காட்டுக்குள் இழுத்து சென்ற பெண்ணை புலிகள் கடித்துக் கொன்றன.
முதலில் தாக்கிய பெண்ணை அங்கேயே போட்டு விட்டு சென்றன. இதனால் படுகாயம் அடைந்தவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
Videoவைக்கான https://youtu.be/uDhJe6-fnWY



