அமெரிக்காவில் மீண்டும் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் இத்தகைய துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருவது கவலை அளிப்பதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா கவலை தெரிவித்து இருந்தார். இருப்பினும், இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறுவது அங்கு வாடிக்கையான ஒன்றாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டிகோ நகரின் சவுத் கிரெஸ்ட் பகுதியில் போலீசாரை குறிவைத்து இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இரு போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



