Breaking News

இந்திய VGP நிறுவனத்தின் அனுசரணையில் கிழக்கில் ஆடம்பரமான சிறுவர் பூங்கா !

இந்தியா தமிழ் நாடு விஜிபி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதை அவரது கொழும்பு காரியாலயத்தில் சந்தித்து கிழக்கில் சிறுவர் பூங்கா அமைப்பது சம்மந்தமாகக் நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தியா தமிழ் நாட்டில் மைக்கப்பட்டுள்ள விஜிபி கோல்டன் பிரமாண்டமான சிறுவர் பூங்காவைப் போன்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒரு விஜிபி கோல்டர் சிறுவர் பூங்கா ஒன்றினை அமைத்துத் தருவதாக முதல்வரிடம் உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது கிழக்கு முதல்வரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார் விஜிபி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம்.  இந்நிகழ்வினை இலங்கை இந்திய இணைப்பாளர் மனவை அசோகன் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.