Breaking News

facebook நண்பரான இராணுவ வீரரை மூன்று நாட்களாக பாலியல் வன்புணர்விற்கு உள்ளாகிய பிக்கு கைது

மூன்று நாட்களாக இராணுவ வீரர் ஒருவரைக் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியதாக   கூறப்படும், மாதம்பை - செத்சிறிகம பகுதி விகாரையின் 25 வயதான பிக்கு ஒருவரை மாதம்பைப் பொலிஸாரால் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர், 25 வயதுடைய ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவர் வவுனியா - கனகராயன்குளம் இராணுவ முகாமில் பணியாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட  பிக்குவும், பாதிக்கப்பட்ட இராணுவவீரரும் நீண்டகாலமாக பேஸ்புக் மூலம் நட்பில் இருந்தாகவும் அவர்கள் பேஸ்புக் ஊடாகக் கருத்துகளைப் பரிமாறி வந்துள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதன்போதே சென்ற 24ஆம் திகதி பிக்குவின் அழைப்பயொட்டி மாதம்பை விகாரைக்குச் சென்றுள்ள இராணுவ வீரர்; கடந்த 27ஆம் திகதியன்றே மீண்டும் கடமைக்கு சமூகமளித்த போது அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, விசாரணைகளை நடாத்திய  மாதம்பை பொலிஸார், குறித்த பிக்குவைக் கைதுசெய்து சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..