Breaking News

நடமாடும் வேற்றுகிரக வாசியின் மற்றுமொரு அதிர்ச்சி வீடியோ.

இந்த பிரபஞ்சத்தில் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா என்பது குறித்து எழுந்து வரும் கேள்விக்கு இனிவரை புரியாத புதிராக இருந்து வருகிறது.

இதற்கு விடைகாணும் வகையிலான வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. அப்படி இருந்தாலும், அவர்கள் எப்படி இருப்பார்கள்? மனிதனைப் போன்றா அல்லது சினிமாவில் காண்பிக்கப்படும் உருவங்களைப் போன்ற பல கேள்விகள் நம்மில் பல பேருக்கு எழுவதுண்டு.

மேலும், இந்த கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் உண்மை என்றே பதில் கூறுகிறார்கள். அவ்வப்போது வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்வதாகவும், வானத்தில் பறப்பதை கவனித்ததாகவும் ஊடகங்களில் செய்திகளும் பரவிவருகிறது.

இது குறித்து, வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆய்வு நடத்திவரும் நான்சி, இந்த பிரபஞ்சத்தில் 218 வேற்றுகிரக இனங்கள் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டின் பாலைவனம் ஒன்றல் சுமார் 8 அடி உயரம் கொண்ட மனிதன் போன்ற வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்வதாகவும், வானத்தில் பறப்பதை பார்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த மர்ம உயிரினம் பாலைவனத்தில் நடந்து செல்வது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளத்திலும், இணையத்திலும் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

போர்ச்சுகலின் மெடிரா தீவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானபோதும், எப்போது, எங்கு பதிவு செய்யப்பட்டது என்பது போன்ற விபரங்கள் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது