குண்டுவீச்சில் தரைமட்டமான கட்டிடத்தில் இருந்து உயிர் பிழைத்த சிறுவன் - கலங்க வைக்கும் வீடியோ
சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. வடக்கு மாகாணமான அலெப்போ நகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இந்த பகுதி போர்க்களமாக காணப்படுகிறது.
இங்குள்ள குவாட்ரிஜ் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.
இந்த கட்டிடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றன. அப்போது 5 வயது சிறுவன் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டான். அவனது பெயர் ஓம்ரான் தக்னீஷ்.
அவனது தலையில் ரத்தக் காயங்களுடன் உடல் முழுவதும் மண் தூசி படிந்திருந்தது. அவனை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அமர வைத்தனர்.
அப்போது நடந்ததை அறியாத அந்த சிறுவன் தனது தலையில் இருந்து வழியும் ரத்தத்தினை கையால் துடைக்கும் காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.