Breaking News

‘லவ் பண்ணா மீட் பண்ண மாட்டாங்க?’ கோஹ்லியுடன் கரீபியன் தீவில் அனுஷ்கா…

காதல் பற்றி அனுஷ்கா…ஏன் யாரிடமும் பேசுவதில்லை என்பதை சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளார். ‘நான் என் காதலை வெளிப்படையாக பேசியபோது, மக்கள் அதை சரியாய் எடுத்துக்கொள்ளாமல் …காஸிப் பேசுவதிலேயே ஆர்வமாய் இருந்தார்கள்.நான் ஒரு நடிகையாக எவ்வளவு சிறப்பாய் நடித்தபோதும்,அதை பற்றி செய்தியாகாமல்,சந்தித்தோம்… பேசினோம் என்று தனிப்பட்ட என் வாழ்க்கை செய்தியாகிறது.’லவ் பண்ணா மீட் பண்ண மாட்டாங்க?’ என்று காட்டமாக மீடியாவுக்கு குட்டுவைத்தார்.

ஆனால், இப்போ அனுஷ்காவும் விராட் கோஹ்லியும் என்ன பண்றாங்கன்னு பாருங்க…


‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தை முடித்துவிட்டு அனுஷ்கா சர்மா சென்ற இடம் கரீபியன் தீவில் உள்ள செயிண்ட் லூசியா. இங்க எதுக்கு போனார்ன்னு பார்த்தா..அங்க தானே நம்ம கேப்டன் விராட் கோஹ்லி வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் சீரிஸ்காக விளையாடிட்டு இருக்கார் .மூன்றாவது மேட்சுக்கு வந்து சேர்ந்த அனுஷ்கா,டேரன் சமி ஸ்டேடிய த்தில் டெனிம் பேண்ட், டீ ஷர்ட்டில் டீமை உற்சாகப்படுத்தி கொண்டு, டீமின் குடும்பங்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு, விராட்டுடன் காதலோடு டைம் ஸ்பென்ட் பண்ணிக்கொண்டு உள்ளார்.