வனராஜாவில் கோரவிபத்து ஆட்டோ சாரதி ஸ்தலத்தில் பலி !!!
ஹட்டன்-டிக்கோயா பகுதியிலுள்ள வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற கோரா விபத்தில், முச்சக்கரவண்டி சாரதி, ஸ்த்தலத்திலேயே உடல் நசுங்கி பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியானது புளியாவத்தையிலிருந்து நோர்வூட் நோக்கி பயணித்துள்ளதாவும் இதன் போது மஸ்கெலியாவிலிருந்து ஹட்டனை நோக்கி பயணித்துகொண்டிருந்த கெப்ரக வாகனத்துடன் மோதுண்டத்தால் குறித்த முச்சக்கர வண்டியானது கெப் வாகனத்துக்கு அடியில் நசுங்கியதாகவும் முச்சக்கரவண்டியில் சாரதி மட்டுமே இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



