Breaking News

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்.(VIDEO & PHOTOS)


(லியோன்)

மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை  மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம்.
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை  மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் 02.08.2016 இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ  ஆலய  தீர்த்த குளத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது .

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை  மஹோற்சவம் கடந்த 24 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

ஆலய மஹோற்சவ காலங்களில் ஆலய பிரதம குரு சிவப்பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாச்சாரியார் தலைமையில் தினமும் தம்ப பூஜை ,வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி மற்றும் வெளி வீதியுலா இடம்பெற்றது .

இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாக பூசை  மற்றும் அபிசேக  வசந்த மண்டப பூஜை நடைபெற்று  ஆலய மஹோற்சவ தீர்த்தோற்சவம் இன்று நண்பகல் ஆலய  தீர்த்த குளத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ இடம்பெற்றது .


இலங்கையில் பிதிர்க்கடன் தீர்க்கும் ஆலயமாக பிரசித்தி பெற்று விளங்கும் அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் ஆடி அமாவாசை தினமான இன்று  தாய் தந்தையர்களை இழந்த பிள்ளைகள் தமது பெற்றோர்களுக்காக  பிதிர்க்கடன் செலுத்தியதோடு, நண்பகல்  தீர்த்தோற்சவம் ஆலய  தீர்த்த குளத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது .