'நீதிபதி சொன்னபடியே முகத்திலேயே குத்தினேன்'
யாழ் சுன்னாகம் பகுதியில், குடும்பஸ்தர் ஒருவர் பெண்ணொருவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகக் கூறி அப்பெண்ணின் சகோதரன் குறித்த அக்குடும்பஸ்த்தரின் முகத்திலேயே குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த, உடுவில் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய அக்குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், தொடர்பிலான விசாரணையின்போது மேற்படி குடும்பஸ்தர், தொடர்ச்சியாக தனது தங்கைக்குத் தொந்தரவு செய்து வந்ததாகாரணத்தினால் தான் தாம் இவ்வாறு செய்ததாகவும் கூறிய நபர், சகோதரிகளுக்குத் தொந்தரவு கொடுப்பவர்களின் முகத்திலேயே குத்துங்கள் என, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறியதற்கமயவே தான் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.



