தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கான மானிய உதவி வழங்கும் நிகழ்வு
(லியோன்)
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் “செமட்ட செவன” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கான மானிய நிதி உதவி வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
இலங்கை ஜனாநயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாட்டின் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரையின் கீழ் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கவின் பங்களிப்புடன் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலின் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “செமட்ட செவன” (யாவருக்கும் நிழல் ) தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் நிதி உதவியின் கீழ் நாடளாவியல் ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வீடமைப்பு மானிய நிதி உதவி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் பயிற்சி பெற்றவர்களுக்கான கைத்தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களில் வீடு கட்டுவதற்கான வழங்கும் கடன் உதவி திட்டத்தின் முதல் கட்ட கொடுப்பனவு 422 பேருக்கும் , வீட்டு சுவர் பூச்சுக்காக ஒருவருக்கு 10 சிமெந்து பேக் வீதம் 175 பேருக்கும் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 80 பேருக்கு தச்சு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்களும் , தச்சு தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டு வழங்கி வைத்தார் .