பயணிகள் உணவகங்களில் விரைவில் சோதனை!
நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பஸ் பயணிக்கும் பயணிகளுக்கு உணவுகளை வழங்கும் ஹோட்டல்களில் விசேட சோதனை நடாத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி உணவகங்கள் கொண்டுள்ள பல்வேறான குறைபாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுளின் அடிப்படையிலேயே இச்சோதனை நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் உணவுகளின் தூய்மை, சுகாதார தன்மை போன்றவற்றில் குறைகள் காணப்படுவதாகவும் மற்றும் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுதல் உள்ளிட்டவை தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித் சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபாலவுக்கு அறிவுறுத்தியதற்கமையவே மேற்படி சோதனை நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.