Breaking News

காணாமல் போனோர் அலுவலகத்தை எதிர்த்து மனுத்தாக்கல் முயற்சியில் கூட்டு எதிரணி ...

நாடாளுமன்றில் அண்மையில் நிறை வேற்றப்பட்ட காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலத்தை எதிர்த்து உயர் திமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கென கூட்டு எதிரணி தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பில் கட்சி உறுப்பினர்களுகிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளதாகவும், எவ்வாறாயினும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு எதிராக காரணம் ஏதுமின்றி எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை தம்முடன் நேரடிக் கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.