Breaking News

தேசியவிருது பெற்ற இளம் பாடலாசிரியர் நா. முத்துகுமார் காலமானார்

சீமானின் வீரநடை படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் நா. முத்துக்குமார் (41). இவர் கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று திடீரென மரணம் அடைந்தார். இவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இவர் இதுவரை 1500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 2 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். தங்க மீன்கள் படத்திற்காக ஆனந்தயாழை மீட்டுகிறாள் என்ற பாடலுக்காகவும், சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே பாடலுக்காகவும் தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது