Breaking News

புர்கினி நீச்சலுடை மீதான தடை நீக்குமாறு பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

பிரான்ஸ் நகரங்களில் புர்கினி என்னும் முழு நீள நீச்சல் உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து வலதுசாரி அமைப்பினர் பிரான்சின் தலைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

புர்கினி என்னும் முழு நீள நீச்சல் உடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது இரண்டு விதமான விவாதங்களை பிரான்சில் உண்டாக்கியது. ஒன்று தனி நபர்களின் ஆடை சுதந்திரம் தொடர்பானது. மற்றொன்று பிரான்சின் மதச்சார்பற்ற தன்மை பாதிக்கப்படுகிறதா என்பது குறித்து. மேலும், இந்த தடை சட்ட ரீதியானதா என்று தீவிர ஆய்வு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், புர்கினி என்னும் முழு நீள நீச்சல் உடைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 

இந்த வகையான ஆடைகளால் பாதிப்பு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டால் மட்டும், தனிநபர்களின் ஆடை சுதந்திரத்தை உள்ளூர் அதிகாரிகள் கட்டுபடுத்தலாம்.

இந்த தீர்ப்பை பொது அறிவிற்கு கிடைத்த வெற்றி என்று முஸ்லீம் நம்பிக்கைக்கான பிரெஞ்சு கவுன்சில் பாராட்டியுள்ளது.