Breaking News

லண்டனின் பலியாகிய ஈழத்து இளைஞர்களின் உடலங்களை அடையாளம் காட்டுமாறு பெற்றோருக்கு பிருத்தானிய போலீஸ் அழைப்பு. VIDEO

நேற்ரயதினம் பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட்  கடலில் மூழ்கிப் பலியான ஐந்து ஈழத் தமிழர்களில் இருவர் சகோதரர்களாகும் இவாறு பலியானவர்களில் நால்வர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.  மறையவர் 27 வயதானவர். 

லண்டனின் கிறின்விச்சிலிருந்து ஹம்பர்சான்ட் கடற்கரைக்குச் சென்ற மேற்படி  நண்பர்கள்  ஐவரும் கடற்கரையில் கால்பந்து வளையாடியபோது, கடல் மட்டம் திடீரென மிகவேகமாக உயர்ந்து அவர்களை  இழுத்த வேளை அவர்கள்  அனைவரும் அவசரமாக கரையை நோக்கி நீந்த முயர்சித்தும் அது பயனற்று போனமையினாலே இந்தத் துயரம் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் கோபிநாதன் (வயது 22) கெனிகன் நாதன் (வயது 19) ஆகிய இருவரும் சகோதரர்களாவார்கள். ஏனையவர்கள்;  நிதர்சன் ரவி (வயது 22) இந்துசன்  சிறிஸகந்தராஜா (வயது 23)  குருசாந்  சிறிதவராஜா(வயது 27) ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

இச்சோககரமான சம்பவத்தையடுத்து குறித்த கடற்கரையில் நிரந்தரமான ஒரு  உயிர் பாதுகாப்புப்  அதிகாரியினை அமர்த்தத் தவறியமைக்காக, குறித்த  கடற்கரைக்குப் பொறுப்பான உள்ளுராட்சி நிர்வாகம் மீது மிக கடுமயான விமர்சனங்களுக்கு உள்ளாகியது.

இன்னிலையில் பலியானவர்களின்  உடலங்களை அடையாளங் காட்டுவதற்காக அவர்களது  உறவினர்கள் காவற் துறையினரால் அழைத்துச் செல்லபட்டுள்ளதாக  தெரிவிக்கபடுகின்றது.