மலேசியாவில் காட்டு யானைக்கு தலைகீழாக வளரும் தந்தம்!
மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், மலேசியாவில் உள்ள ஒரு காட்டு யானைக்கு அரிய வகையில் தந்தம் வளர்ந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை, அங்குள்ள வனத்துறையினர் கண்டுபிடித்து கூறியுள்ளனர்.
மலேசியாவில் உள்ள காட்டில் தலைகீழாகத் தந்தம் வளர்ந்த யானை ஒன்று சுற்றித்திரிவதை வன ஆராய்ச்சியாளர்கள் பார்த்துள்ளனர். அதை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அப்போது, அந்த யானைக்கு வழக்கமான முறையில் வளர்வதை போல் தந்தம் வளராமல் தலைகீழாக வளர்ந்துள்ளது.
இது தொடர்பாக அங்குள்ள வனத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மற்றும் 2015ம் ஆண்டு, இதுபோன்ற 2 யானைகள் கண்டறியப்பட்டது என்றும், ஆனால், தந்தம் இப்படித் தலைகீழாக வளர்வதற்குண்டான காரணம் எங்களால் அறிய முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.



