நியூயார்க் விமான நிலையம் திடீரென மூடபட்டது !
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தின் 8-வது முனையத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக விமான நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக நியூயார்க் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த அவர்கள் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தனர். இருப்பினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.



