எமிரேட்ஸ் விமானம் தரையிறங்கும்போது வெடித்து சிதறியது !! 282 பேர் உயிர் தப்பினர்
திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் தரையிரங்கும் போது விபத்துக்குள்ளானது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து இன்று காலை துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் துபாயில் தரையிரங்கிய போது விமானத்தின் முன் சக்கரம் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக திடீரென விமானத்தின் மூக்கு பகுதி தரையில் உரசியது, இதனால் அதிர்சியடைந்த விமானி விமானத்தை அவசர அவசரமாக தரையிரக்கினர்.
விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்த 282 பேர் பயணிகள் உள்பட அனைவரையும் விமானத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து விமானத்தில் இருந்து புகை ஏற்பட்டு தீ பிடித்தது. தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில் விமானம் திடீரென வெடித்து சிதறியது. பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதால் பெரும் உயிரழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.



