Breaking News

இங்கிலாந்து – பாகிஸ்தான் டெஸ்ட், இங்கிலாந்து அணி 328 ரன்னுக்கு ஆல் அவுட்…

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அலெய்ஸ்டர் குக் மற்றும் ஹேல்ஸ் ஜோடி சிறிது நேரமே நீடித்தது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 328 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அலெய்ஸ்டர் குக் 35 ரன்களுக்கு வெளியேறினார். ஜோ ரூட் 26 ரன்களிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 6 ரன்களிலும் அவுட்டாக, இங்கிலாந்து அணி 73 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்தது.

அடுத்து வந்த பெயர் ஸ்டோக் 55 ரன்களும், மொயின் அலி 108 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 45 ரன்களும் எடுத்து, இங்கிலாந்து அணியின் ரன் எண்ணிக்கைக்கு உதவினர். பாகிஸ்தான் தரப்பில் சொஹைல் கான் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணி தனது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 ரன்களுக்கு 1 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகின்றது. சமி இஸ்லாம் 1 ரன்னில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.