தாய்லாந்தில் தொடர் குண்டு வெடிப்பு!!
தாய்லாந்து நாட்டில் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஹுவா ஹின் ரிசாட்டில் திடீரென 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன.
மேலும் புக்கெட் ஹிட் கடற்கரை நகரத்தில் இரண்டு இடங்களிலும், சுரத் பகுதியில் ஒரு இடத்திலும், பதங்கில் 2 இடத்திலும், திரங்கில் ஒரு இடத்திலும் பதங் என்ஜிஏ பகுதியில் ஒரு இடத்திலும் மொத்தம் 10 இடங்களில் 24 மணி நேரத்தில் தொடர்ந்து குண்டுகள் வெடித்துள்ளன.
இந்த தொடர் குண்டு வெடிப்பில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பல பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் நடந்த இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த நாசவேலையில் தாய்லாந்து நாட்டின் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் இந்த வார கடைசியில் தாய்லாந்து ராணியின் பிறந்தநாள் என்பதால் இதனை குறிவைத்தும் இந்த குண்டு வெடிப்பு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தாய்லாந்து பிரதமர் கூறுகையில், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தியுள்ளதாகவும், இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என அவர் தெரிவித்தார்.
தாய்லாந்து நாட்டில் ராணுவ பாதுகாப்பை பலப்படுத்தும் அரசியலமைப்புக்கு கடந்த வாரம் ஒப்புதல் வாக்கெடுப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது.