காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 53 மில்லியனில், இரத்த வங்கி மற்றும் புதிய கட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கி மற்றும் புதிய கட்டத்திற்கான அடிக்கல் நடும் மாபெரும் நிகழ்வு இன்று காலை வைத்தியசால வைத்திய அத்தியேட்சகர் எம்.எஸ்.ஜபீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், அதிதிகளாக மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.முபீன் மற்றும் கிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளர் கே.முருகானந்தன் ஆகியோரும் மற்றும் பல அரச அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பலரும் கலந்து கொண்டனர்.
இரண்டு கட்டங்களாக ஒதுக்கப்பட்ட 53 மில்லியன் ரூபாய்களும் இவ்வருடத்துக்குள் இதன் வேலைகள் பூரணப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய இவ்வருடத்துக்குள் குறிப்பிட்ட இரத்த வங்கி மற்றும் வைத்தியசாலைக்கான புதிய கட்டிடம் ஆகியவை அமையப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



