Breaking News

26 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட குமாரபுரம் கொலை வழக்கு மேன்முறையீடு செய்யப்படவுள்ளது.

குமாரபுரம் இடம்பெற்ற  படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நேரடிச் சாட்சியங்கள் இருந்தும் அவை முறையாக அரச தரப்பால் கையாளப்படாமல் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுவதனால், குறித்த வழக்கை மேன்முறையீடு செய்வதற்கென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.