Breaking News

தவறை ஏற்றுக்கொண்டது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி

அண்மையில் சட்டமாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைக்கும் சட்டமூலம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியால், நீதிமன்றம் செல்ல இயலாமல் போனமை தொடர்பில் நாட்டு மக்களிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உருவாகியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிக்கவென ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.