காணாமல் போன குழந்தைகளை மீட்க களம் இறங்கும் ரஜினி !
நடிகர் ரஜினி காந்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும், அவர்களே சில நேரம் வருத்தப்படும் விசயம் உண்டு.
தலைவர் சமூக சேவையில் அவ்வளவு ஈடுபாடு காட்டுவதில்லை என்ற வருத்தம் உண்டு. இந்நிலையில் நடிகர் ரஜினி காந்த் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ள அபயம் கேர் பார்சில்ட்ரன் என்ற அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
இந்த அமைப்பு காணாமல் போன குழந்தைகளுக்கு மறு வாழ்வு ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாகும்.
ரஜினியின் மனைவி லதா தான் நடத்தி வரும் சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற அமைப்பின் மூலம் காணாமல் போன குழந்தைகளை மீட்டல், மற்றும் மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் நிலையில் அவருடைய ஏற்பாட்டின் பேரிலேயே இந்த நிகழ்ச்சியில் நடைபெறுகிறதாம்.



