Breaking News

மனதில் நினைப்பதைப் படமாக்கும் திட்டம் ஆய்வாளர்கள் தீவிரம் !!!

யாருக்கும் தெரியாமல் நம் மனதிற்கு மட்டும் தெரிந்தவற்றை தான் ரகசியம் என்பார்கள். அறிவியல் ஆர்வலர்களின் புதிய ஆய்வு இதற்கும் ஆப்பு வைக்க நினைக்கின்றது. ரகசியமே இருக்கக் கூடாது என்ற நோக்கில் நம் மனதில் நினைப்பவற்றை திரையில் மற்றவர்களும் பார்க்க வைக்கும் திட்டத்தில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆரிகான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு குழுவினர் மனித மூளையை ஸ்கேன் செய்து அவர்கள் மனதில் நினைப்பவற்றை கண்டறியும் அமைப்பு ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

முதற்கட்டமாக மனிதர்கள் தங்களது மனதில் நினைக்கும் முகங்களை மறுஉருவாக்கம் செய்யும்படி குறிப்பிட்ட அமைப்பினை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.

'ஒருவரின் மனதினுள் ரகசியமாக இருப்பவற்றை, அவர்களின் மனதில் இருந்து எடுக்க முடியும்' என ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருக்கும் நரம்பியல் ஆய்வாளரான பிரைஸ் குல் தெரிவித்துள்ளார்.