Breaking News

மேத்யூசின் தலையில் பட்ட பந்து……

இலங்கையில் சுற்றுபயணம் செய்துள்ள அவுஸ்திரேலியா தற்போது ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.  இன்றய 4வது ஒரு நாள் போட்டி ஆரம்பத்தில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை துடுப்பாட்டத்திற்கு முடிவு செய்தது. இதன்படி மேத்யூஸ் பேட் செய்து கொண்டிருந்தபோது, ஸ்காட் பாலன்ட் வீசிய பந்து பலமாக தாக்கியது.

இதனால் தலையின் பின்பகுதியை பாதுகாக்கும், ஹெல்மெட்டின் ஒரு பகுதி உடைந்தது. இந்த நிகழ்வு சற்று நேரத்திற்கு அனைத்து வீரர்களையும் திகைப்பில் ஆழ்த்தியது. காயமுற்ற மேத்யூஸ் அதிர்ச்சி காரணமாக தொடர்ந்து விளையாடாமல் பெவிலியன் திரும்பினார்.