சுலைமான் ஜனாஸாவை கொண்டுசெல்ல உதவிய இருவருக்கு வலைவீச்சு!
அண்மையில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டியைச் சேர்ந்த பிரபல இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் ஜனாஸாவை மாவனெல்ல ஹெம்மாத்தகமவுக்கு எடுத்துச்செல்வதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் கிராண்ட் பாஸ் மற்றும் சேதவத்தை பகுதியைச் சேர்ந்த இருவர் வெகு விரைவில் கைதாகவுள்ளதாக இச்சம்பவம் குறித்தது விசாரணைகளை முன்னெடுக்கும் விசேட பொலிஸ் குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலையுடன் தொடர்புடையோரை துல்லியமாக அடையாளம் காணவென போலீசார் கொழும்பிலிருந்து மாவனெல்ல, ஹெம்மாத்தகம பகுதி வரையுள்ள சீ.சீ.டிவி கமெராக்களிலும் மற்றும் கொழும்பு, பம்பலப்பிட்டிய சனநெரிசல் மிக்க இடங்களிலுள்ள சீ.சீ.டிவி கமெராக்களில் பதிவாக காட்சிகளையும் சோதனை நடாத்தியதுடன், சுலைமான்கடத்தப்பட்ட அன்றிரவு வர்த்தகரின் தந்தையிடம் கப்பம் கோரி, கேகாலையிலிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பினை எடுத்த நபரையும் அடையாளம் காணும் நடவடிக்கையிலும் தீவிரமாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



