Breaking News

குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் !!!

வடக்கு மாகாண சபையில் மூன்று அமைச்சர்களுக்கு எதிராக  ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கென குழுவொன்று அமைக்க படவேண்டும் அமைக்கப்படவேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளமை தமக்கு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி  தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை குற்றஞ்சாட்டப்பட்ட வர்கள் அமைச்சு பதவிகளில் இருந்து தாமாகவே விலகிக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.