முன்னாள் ஜனாதிபதிக்கு வரப்பிரசாதம் வழங்கவேண்டாம் பிரதமரிடம் சிவில் அமைப்புகள் வேண்டுகோள் !!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணஞ்செய்யும் போதும் நாடுதிரும்பும் போதும் அவரது பயணப் பொதிகள் எவ்விதமான சோதனைக்கும் உட்படுத்தப்படுவதில்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளநிலையிலும், மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது, நிதி மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இவ்வாறான வரப்பிரசாதங்களை வழங்கவேண்டாம் என குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சிவில் அமைப்பு, இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று(18) கடிதமொன்றை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.