Breaking News

நடிக்க வேண்டுமாயின் படுக்கையறைக்கு வரணுமாம்: நடிகையின் வேதனை !

தமிழில் சரத்குமாருடன் ஐ லவ் இந்தியா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் டிஸ்கா சோப்ரா. அவர் வருத்தமுடன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

நான் சிறிது காலம் பட வாய்ப்பில்லாமல் மும்பையில் இருந்தேன். அமீர் நடித்த தாரே ஜமீன் பர் படத்தில் மூளை வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தையின் தாயாக நடித்து புகழ் பெற்றேன். 1993ம் ஆண்டில் தமிழ் படத்தில் சரத்குமாருடன் நடித்தேன்.

படம் இல்லாத காலத்தில் இந்தியில் ஒரு பெரிய தயாரிப்பாளர் என்னை அழைத்தார். ஆகா நல்ல பட வாய்ப்பு அமைய போகிறது என்று மகிழ்ச்சியுடன் ஹை ஹீல்ஸ் போட்டு சூப்பரா அவரை பார்க்க போனேன்.

என்னைப்பார்த்ததும், நீ..இன்னும் ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பதில் திறன் பெற வேண்டும் என்றார். ஆகா நாம வளர்வதில் எவ்வளவு அக்கறை என்று சந்தோஷப்பட்டேன். பின்னர் பட வாய்ப்பு கொடுத்தார். ரொம்ப மகிழ்ந்தேன்.

என் தோழிகளிடம் கூறினேன். அவர்கள் அதிர்ந்தார்கள். என்ன அவர் படத்திலா? அவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் உன்னை நடிக்கவேவிடுவார் என்று தோழிகள் குண்டைப்போட்டார்கள். வேறு வழியில்லை சமாளிப்போம் என்று மும்பையில் சூட்டிங்கில் கலந்து கொண்டேன். அப்போது அவரது மனைவியும் வந்திருந்தார். அவருடன் நெருங்கிப்பழகினேன். அவர் தொடர்பு இருந்தால் தயாரிப்பாளர் மனைவிக்கு பயந்து என்னை படுக்கை’கு அழைக்க மாட்டார் என்று நினைத்தேன்.

இரண்டொரு நாளில் வெளிநாட்டில் சூட்டிங். தயாரிப்பாளருக்கும் எனக்கும் ஒரே தளத்தில் அருகருகே அறைகள். அப்போதே எனக்கு பயம் வந்துவிட்டது. இரவில் என்னை அழைத்து தனியாக அறைக்கு வரும்படி கூறினார்.நானும் போகாமல் இருக்க முடியாதே? என்று நினைத்த வேளையில் ஒரு ஐடியா கிடைத்தது. ஓட்டல் ஊழியர்களிடம் கூறி அவரது அறைக்கு அடிக்கடி போன் போடும்படி கூறினேன். அதன்படி நான் அறைக்குச் சென்றதும் ஓட்டல் ஊழியர்கள் அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்தார்கள். கோபத்தில் கொந்தளித்த தயாரிப்பாளரிடம் இருந்து தப்பினேன் என்று சொல்லியிருக்கிறார்.