மட்டக்களப்பில் நரியை தப்ப விட்டதால் காவலர் பணி நீக்கம் ; ஊர்மக்கள் ஆர்ப்பாட்டம் !
மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு போதனா வைத்தியசாலை மட்டக்களப்பில் அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு திராய்மடுப் பகுதியைச் சேர்ந்த 'நரி' என்று அழைக்கப்படும் மீன் வர்த்தகர் அங்கிருந்து தப்பித் தலைமறைவாகியுள்ளதால் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்ன் உடனடியக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என, மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.
மேற்படி தப்பியோடியவரும் அவரது சகாக்களுமாக மொத்தம் 8 பேர் கிராம இளைஞர்களைத் தாக்கிய கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த வியாழக்கிழமை (11)யனற்று கைது செய்யப்பட்டநிலையில், குறித்த வர்த்தகர் காயமேற்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில், பொலிஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே தலை மறைவாகியுள்ளார்.
சமபவம் தொடர்பில் அறிந்த பிரதேச மக்கள், பொலிஸாரின் உதவியுடன் தான் அவர் தப்பித்திருக்கவேண்டும் என்று கூறி, இரவோடிரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது தப்பிச் செல்லவிடப்பட்ட வர்த்தகரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் ஆக்ரோஷம் வெளியிட்டனர்.
இதன்காரணமாக மீன் வியாபாரியைத் தேடும் பணியில், பொலிஸ் குழுவொன்று கடந்த வியாழக்கிழiமை இரவு முதல் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேற்படி திராய்மடு பிரதேசத்தில் அடாவடித்தனங்களில் ஈடுபடும் குறித்த மீன் வியாபாரியான டீ சில்வா ஜயசேகர, தனது மனைவியுடன்; தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தொடர்ச்சியாக தேடுதலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



