முகமாலையில் இரு இடங்களில் கண்ணிவெடியில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்
கிளிநொச்சியின் முகமாலை பகுதியில் கடந்த 12ம் திகதியளவில் இடம்பெற்ற கண்ணிவெடி வெடிப்புச் சம்பவத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார் மற்றும் பிறிதொரு வெடிப்புச்சம்பவத்தில் கண்ணிவெடி அகற்றும் பெண் பணியாளர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேற்படி வெடிப்பு சம்பவத்தில் பலியான குடும்பஸ்த்தர் கண்ணிவெடிகளின் வெடி மருந்தினை விற்பனை செய்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்றது காரணம் குறித்த நபர் முகாமலை பகுதியில் மிக்க செறிவான கண்ணிவெடி உள்ள பிரதேசத்துக்குள் கடந்த 12 திகதி சென்றவர் இறந்த நிலையில் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரருகில் இருந்து 15 வரையான கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்படத்தவும் தெரிவிக்கப்படுகின்றது.
மற்றய சம்பவத்தில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணிபுரிந்த 45 வயதான கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் இடம்பெற்ற வெடிப்பில் அவருடைய ஒரு கண் முற்றாக பாதிக்க பட்ட நிலையிலும் மற்றய கண் பகுதியளவில் பாதிக்கப்பட்ட நிலையிலும் காலில் மிகப்பெரும் காயத்துடனும் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.



