Breaking News

ஒலிம்பிக் போட்டியில் ரபெல் நடால் ஆடுவதில்.... சந்தேகம்....

மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர் ரபெல் நடால் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் போட்டியில் விளையாடவில்லை. 

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ரியோடிஜெனீரோ சென்று இருக்கும் ரபெல் நடால் உடல் தகுதி பிரச்சினை காரணமாக டென்னிஸ் போட்டியில் களம் காண்பாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. 

இது குறித்து ரபெல் நடால் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த 2 மாதங்களாக நான் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. நிறைய பயிற்சியும் செய்யவில்லை. இங்கு இன்னும் சில நாட்கள் பயிற்சியில் ஈடுபட்ட பிறகு எது நல்லது என்று பார்த்து விளையாடுவது குறித்து முடிவு எடுப்பேன்’ என்றார்.