Breaking News

சிந்துவின் ரசிகராக மாறிய ரஜினிகாந்த் !!

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு நாடு முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சமூக வலைதளமான டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் அரசியல் தலைவர்களும், நடிகர், நடிகைகளும் தங்களுடைய வாழ்த்துச் செய்திகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டர் ரஜினிகாந்த் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சிந்துவின் வெற்றி பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் எனவும் நான் அவரது ரசிகன் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு இந்தியாவுக்கு  வெள்ளி பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவ்வாறு கூறியுள்ளார்.