Breaking News

தனுஷுக்கு NO , சிவகார்த்திகேயனுக்கு YES - சமந்தா சொல்வதற்கு என்ன காரணம் ?

போன வருடம் தான் தங்க மகன் படத்தில் தனுஷும் சமந்தாவும் நடித்தார்கள்.படம் சுமாராக போனாலும், இருவரின் கெமிஸ்ட்ரி சூப்பர் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், கடந்தநான்கு மாதங்களாக சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று ஏகத்துக்கும் செய்திகள் வந்தததினால் , கையில் வைத்திருக்கும் படங்கள் தவிர , புது படங்கள் ஏதும் ஒப்புக்கொள்ளவில்லை என்றார்கள்.

ஆனால், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க தற்போது சமந்தா ஒப்புக்கொண்டது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு, வட சென்னை படத்தில் சமந்தாவை நடிக்க கேட்டபோது, சமந்தா மறுத்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.

வட சென்னை 3 பாகங்கள் என்பதால், நடிக்கவில்லை என்று சொல்லப்பட்ட போதிலும், தங்க மகனில் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருந்ததோடு, தனுஷ் தற்போது தீராத விளையாட்டு பிள்ளையாக (!!) மாறியதால்…கொஞ்சம் யோசித்தாராம் சமந்தா.

என்ன, தனுஷுக்கு தான்…தான் வளர்த்த சிவாவே தனக்கு போட்டியான்னு தங்க முடியலயாம்.