Breaking News

ரெதிதென்னயில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெதிதென்ன பகுதியில் நேற்று(11) மாலை ஆறு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவிகின்றனர். இவ்விபத்தில் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் எல்ப் ரக ஊர்தியும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டத்தில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில்  வெலிக்கந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.