Breaking News

அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை மஹோற்சவம் தேர்த்திருவிழாவினை தொடர்ந்து சுவாமிக்கு பச்சை சாத்தும் வைபவம்

(லியோன்)

இலங்கையில்  வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை  மஹோற்சவம் தேர்த்திருவிழா  01.08.2016  ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ  கோலாகலமாக நடைபெற்றது
ஆலய மஹோற்சவகாலங்களில் ஆலய பிரதம குரு சிவப்பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாச்சாரியார் தலைமையில் தினமும் தம்ப பூஜை ,வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி மற்றும் வெளி வீதியுலா நடைபெற்றது .

01.08.2016  அதிகாலை காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன்  தொடர்ந்து விசேட யாக பூசை  மற்றும் அபிசேக வசந்த மண்டப பூஜை நடைபெற்று  ஆலய மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா  நடைபெற்றது.

இதனை  தொடர்ந்து சுவாமிக்கு பச்சை சாத்தும் வைபவம்  ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ மிக பக்தி பூர்வமாக நடைபெற்றது  .