Breaking News

யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான நலன்புரி திட்டம்


(என்டன்)



ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த கால யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான  பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொலிஸ்  உத்தியோகத்தர்களின் சேவை நலனுக்காக நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்  நாடளாவிய ரீதியில் நலன்புரி உதவி திட்ட மையங்கள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுதத்தத்தின் போது அங்கவீனமுற்ற மற்றும் இறந்து போன பொலிஸ் உத்தியோகத்தர்களின்  சேவை நலனுக்காக குடும்ப உறவுகளின் உறுப்பினர்களுக்கு நலன்புரி திட்டத்தின் கொடுப்பனவுகள்  தொடர்பான  தெளிவு படுத்தும் முதல் கட்ட கலந்துரையாடல்  மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு நலன்புரி சங்க ஒருங்கிணைப்பாளர்  எஸ் .ஐ . எம் .எ .ஜி . ஜெயவர்த்தன ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்  கே .பி . கீர்த்திரத்ன தலைமையில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய கேட்போர் கூடத்தில் 05.09.2016 திங்கள் கிழமை நடைபெற்றது .

அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு படை பிரிவுக்கான  நலன்புரி அமைப்பின் உத்தியோகத்தர்  டி .எச் .கீதிகா ஜெயவர்த்தன கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கு  விளக்கமளித்தார் .


நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில்  மட்டக்களப்பு  மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றி உயிரிழந்த உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்