Breaking News

காத்தான் குடியில் வாகனத்திலிருந்து சடலம் மீட்பு !!

மட்டக்களப்பு, காத்தான்குடியில் 6ஆம் குறிச்சியை அண்மித்த கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய லொறிரக வாகனத்தில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது கல்முனைக்குடியினை சேர்ந்த 62 வயதான எம்.எம்.பாறூக் என்பவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது. மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.