Breaking News

இறந்துபோனபிறகும் கோடிக்ணக்கில்சம்பாதிக்கும் சார்லி சாப்ளின் !

உலக ரசிகர்களை தனது நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்டவர் சார்லி சாப்ளின். இவர் தனது கடைசி 25 ஆண்டுகளை மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்து நாட்டில் வசித்தார். ஜெனீவா ஏரிக்கு அருகில் சார்லி சாப்ளின் வசித்து வந்த ஆடம்பரமான வீடு கடந்த மாதம் சாப்ளின் வேர்ல்டு என்ற பெயரில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் சார்லி சாப்ளின் பயன்படுத்திய பொருட்கள், அவர் நடித்த படங்களின் தொகுப்பு, சார்லி சாப்ளின் பற்றிய முக்கிய குறிப்புகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த அருங்காட்சியகத்திற்கு மாதம் தோறும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதி ஐரோப்பாவிலேயே முக்கியமான சுற்றுலா தலமாக மறி வருகிறது. அதுமட்டும் அல்லாமல் சுற்றுலா துறைக்கு கோடிக்கணக்கில் வருவாயும் கிடைப்பதாக அருங்காட்சிய அதிகாரி தெரிவித்துள்ளார்.