Breaking News

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரபல கிரிக்கெட் வீரர் !!!

வங்காளதேஸ் கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன். இவரும் இவரது மனைவி அகமது ஷிஷிரும் டாக்காவில் நடந்த படப்பிடிப்பு ஒன்றிற்காக ஹெலிகாப்டரில் காக்ஸ் பஜார் என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்களை பத்திரமாக இறக்கி விட்டு ஹெலிகாப்டர் மீண்டும் டாக்கா நோக்கி திரும்பி கொண்டிருந்தது.

அப்போது வழியில் இனானி கடற்கரைக்கு அருகே ஹெலிகாப்டர் வந்தபோது விபத்துக்கு உள்ளாகியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து அல்ஹச் கூறுகையில், நான் நலமாக இருக்கிறேன். ஹெலிகாப்படர் விபத்துகுள்ளான செய்தி அறிந்து பதறி போனேன். விபத்து குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அப்போது நான் படப்பிடிப்பில் இருந்தேன் என்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.