Breaking News

கொழுப்பை குறைக்ககூடிய வெற்றிலை மிளகு தோசை !!!

உணவே மருந்து..மருந்தே உணவு..!

தேவையான பொருள்கள்:
வெற்றிலை = 6
மிளகுத்தூள் = 2 ஸ்பூன்
தோசை மாவு = 5 கப்
எண்ணெய் = சிறிதளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வெற்றிலைகளை நன்கு சுத்தம் செய்து காம்புகளை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டி மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கையால் நன்றாக பிசைந்து தோசை மாவுடன் சேர்த்து போட்டு நன்கு கலந்து தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி தோசை மாவை ஊற்றி பிறகு தோசையை சுற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
இந்த தோசையை நன்கு கனமாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
சூடான வெற்றிலை மிளகு தோசை தயார். 

இதை அனைத்து விதமான சட்னியுடனும் சேர்த்து சாப்பிடலாம் இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான தோசை. 
வெற்றிலையின் மருத்துவ குணங்கள்.
புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள், மாவுச்சத்து, நார்ச்சத்து, மற்றும் கலோரிகள் காணப்படுகிறது. மேலும் கால்சியம், கரோடின், நியாசின் மற்றும் வைட்டமின் “சி”, அமினோ அமிலங்கள், டையாஸ்டேஸ் ஆகியவை உள்ளது.
இது ஜீரணத்திற்கு மிகவும் உதவுகிறது. வாய்வு தொல்லைகளை குறைக்கும். விஷக்கடிக்கு உதவுகிறது.
சிறுநீர் பிரச்சனை, அதிக இரத்தப்போக்கு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். கண் வலி, வயிற்று வலி, தலைவலி, மலச்சிக்கல் மற்றும் நரம்பு தளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.
இந்த பக்குவத்தில் வாரம் ஒரு முறை செய்து சாபிடுங்கள்.