Breaking News

கடனை குழந்தையை விற்ற பெற்றோர் !!

வாங்கிய கடனை அடைப்பதற்காக பிறந்து 5 மாதங்கள் மட்டுமே ஆன குழந்தையை விற்ற பெற்றோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பபுபுர்வா பகுதியை சேர்ந்தவர்கள் காலித்(40), சாயிதா(35) தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தங்கள் வீட்டின் அருகேயே  தேநீர் கடை  ஒன்றை நடத்தி வருகின்றனர். குடும்ப கஷ்டத்தை போக்குவதற்காக வட்டிக்கு 50ஆயிரம் வாங்கியுள்ளனர்.

 வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் இவர்கள் திணறி வந்த நிலையில், வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள்   பணத்தை திருப்பி கேட்டு  தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் செய்வதறியாது தவித்த காலித்- சாயிதா தம்பதி, பைசான் என்ற வர்த்தகரிடம் தங்களது 5 மாத குழந்தையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.1.6 லட்சத்திற்கு விற்று தங்களது கடனை அடைத்துள்ளனர்.

செய்த தவறை மறைப்பதற்காக தங்கள் குழந்தை காணாமல் போய் விட்டதாக தங்கள் உறவினர்களிடம் கூறி  நாடகம் ஆடி வந்துள்ளனர். போலீஸில் தங்கள் குழந்தை காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தம்பதியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார் தொடர்ந்து சில நாள்காளாக  ஜகர்கட்டி பஸ் நிலையத்தில் வைத்து, குழந்தையுடன் பைசானை போலீசார் கைது செய்தனர். பைசானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காலித்தும், சயீதாவும் குழந்தையை விற்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து குழந்தையை விற்ற தம்பதியினரை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.