Breaking News

புகைப்படத்துறை ஜாம்பவானின் அதிநவீன கண்டுபிடிப்பு; இனி உங்கள் போன்களும் DSLR தான் !!! - வீடியோ

உங்களில் பலருக்கும் “ஹாசல்பிளாட்(Hasselblad)” என்ற நிறுவனத்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நிலவுக்கு முதன்முதலில் ஆம்ஸ்ட்ராங் சென்றபோது அதனை படம் பிடிக்க நாசாவால் தேர்ந்தெடுக்கபட்ட நிறுவனம் தான் இது.

இந்த நிறுவனத்தின் கேமராக்களின் விலையை கேட்டால் சற்று மலைப்பாகத்தான் இருக்கும்.

அப்பேற்பட்ட இந்நிறுவனம் ஓர் புதுவித கேமராவை அறிமுகம் செய்துள்ளது.

“மோட்டோ” நிறுவனமும் “ஹாசல்பிளாட்” நிறுவனமும் இணைந்து இந்த புது தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளனர்.

(Hasselblad True Zoom) என்றழைக்கப்படும் டிஜிட்டல் கேமரா போன்ற இச்சாதனத்தை நம் மோட்டோ ஸ்மார்ட் போனுடன் பிரத்யேக காந்தங்கள் மூலம் இணைத்துக்கொள்ளலாம்.

ஆனால் இந்த தொழில்நுட்பம் மோட்டோவின் Z சீரிஸ் மொபைல்களில் மட்டுமே பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை “மோட்டோ மாட்” (Moto Mod) என்று அழைக்கின்றனர்.

12 எம்.பியினை தன்னகத்தே அடக்கிய இந்த கேமராவில் 1080p HD வீடியோ எடுப்பதோடு மட்டுமல்லாமல், இதனை பயன்படுத்தி RAW முறையில் படம் பிடிக்கவும்முடியும்.

மேலும் இதில் பளிச்சென்ற “xeon” பிளாஷ் அம்சமும் அடங்கியுள்ளதோடு. இதன் zoom திறன் 25-250mm வரை இருக்கின்றது.

வெளிச்சம் குறைவான இடத்தில் கூட திறம்பட செயலாற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கேமரா 3200 iso வரையில் படம் எடுக்கக்கூடியது. DSLR கேமராவில் எடுக்கும் தரம் இதிலிருக்கும் என்று கூறப்படுகிறது.

புகைப்படத்துறையில் ஒரு ஜாம்பவானான “Hasselblad”-ன் இந்த புதுக் கண்டுபிடிப்பிற்கு புகைப்படக் கலைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. “Moto Mod” இந்த மாத இறுதிக்குள் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.