Breaking News

த்ரிஷாவை கடுப்பாக்கிய இயக்குனர்…

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கப் போகிறார். அதில் தனக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்யச் சொன்னாராம் சிம்பு. த்ரிஷா வும் “விண்ணைத்தாண்டி வருவாயா ” போல சூப்பர் ஜோடின்னு திரும்ப பேர் எடுக்கலாம்னு கதை கேட்க ஒப்புக்கொண்டார். வந்தார் …டைரக்டர் , ” மேடம், ஓபன் பண்ணா…நீங்க வயசான வேசத்தில அப்பா சிம்புவுக்கு ஜோடி, இன்னொரு சிம்பு இருக்கார். அவருக்கு நீங்க தான் அம்மா ” என்றார். த்ரிஷா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க,”வாட், சிம்புவுக்கு நான் அம்மாவா? என்னை யாருன்னு நினைச்ச ன்னு ” தரை லெவெலுக்கு இறங்க, ஒரே களேபரம் தான் . இயக்குனர் ஒரே ஓட்டமா ஓடி வந்தாராம்.