Breaking News

மாபெரும் கெரம் பிக் மேச் மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது .

( என்டன்)

மட்டக்களப்பு  ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கும்  , மட்டக்களப்பு  மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்திற்கும் இடையிலான   மாபெரும் கெரம்  பிக் மேச் நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கும்  , மட்டக்களப்பு  மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்திற்கும்  இடையிலான  3வது மாபெரும்  கெரம்  பிக் மேச்   மட்டக்களப்பு  மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய அதிபர் இரா சண்டேஸ்வரர் தலைமையில் பாடசாலை  மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது .

மூன்றாவது வருடமாக நடத்தப்பட்ட இந்த  மாபெரும்  கெரம்  பிக் மேச்   போட்டியில் ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் 169 புள்ளிகளையும் , மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம்  104 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது .

இரு பாடசாலைகளும் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் 169 புள்ளிகளை பெற்று 2016 ஆம் ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு  வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது .

இந்த போட்டியில் கலந்து கொண்டு  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் ,சான்றிதழ்களும் மற்றும்  இரு  பாடசாலைகளுக்கும்  வெற்றி கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது

இந்த  மாபெரும்  கெரம்  பிக் மேச்   போட்டி  நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் , சிறப்பு  அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ . சுகுமாரன் , உதவி உடல்கல்விப் பணிப்பாளர் வி .லவக்குமார் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .


இந்த கெரம் விளையாட்டினை மாணவர்களின் மத்தியில் ஊக்குவிக்கும் முகமாக மட்டக்களப்பு கல்வி அலுவலகத்தினால் கெரம் விளையாட்டுக்காக    இந்த இரு பாடசாலைகளையும் தெரிவு செய்து மாணவர்களுக்கு கெரம்  விளையாட்டுகள் தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு இதில்  மாணவர்கள் தேர்ச்சி பெற்றதன் பின் இரு பாடசாலைகளுக்கிடையில் இந்த பிக் மேச் போட்டிகள் மூன்றாவது வருடமாக நடத்தப்படுகின்றமை குறிப்பிடதக்கது .