Breaking News

காரசாரமான விவாதத்தை சமூக வலைதங்களில் ஏற்படுத்தய கொழும்பின் பிரபல ஆண்கள் பாடசாலையின் அறிவிப்பு பலகை !!

கொழும்பின் உயர்தர தனியார் பாடசாலையில் பார்வைக்கென வைக்கப்பட்டிருந்த அந்த அறிவிப்பு பதாகையில் எந்த எழுத்துக்களும் இல்லை.பதிலாக வேறுபட்ட உடைகளில் 16 பெண்களின் படங்களை கொண்டிருக்கும் அதில், பாதி படங்களுக்கு சரி என்ற அடையாளமும், மீதி பாதி படங்களுக்கு தவறு என்ற அடையாளமும் வழங்கப்பட்டிருப்பதை காணலாம்.

இது விபத்தாய், தற்செயலாக நிகழ்ந்தவிட்ட ஒன்றல்ல. கொழும்பில் இப்போது இது நாகரீகமும் அல்ல.மாறாக, பெண்கள் இந்த பள்ளிக்கூடத்திற்குள் ஆசிரியர்களை சந்திக்க வரும்போது அல்லது தங்களுடைய குழந்தைகளை பள்ளியிலிருந்து கூட்டிச்செல்ல வரும்போது, என்ன உடைகளை அணியலாம், எவற்றை அணியக் கூடாது என்பதை விளக்குகின்ற அறிவிப்பு பலகையே இது.