Breaking News

அமெரிக்கர்களுக்கு ஆப்புவைத்த மும்பை லாலாக்ககள் !

மும்பை தொலைத்தொடர்பு அழைப்பாளர் மையங்கள் மூலம், அமெரிக்க மக்கள் பலரிடம் பல ஏமாற்று வேலைகள் நடந்திருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் உள்ள தானேயில் மிரா சாலையிலுள்ள தொலைத்தொடர்பு அழைப்பாளர் மையங்களில் உள்ள மூன்று தொலைத்தொடர்பு அழைப்பாளர் மையங்கள் (டெலிகாலர்ஸ் சென்டர்), மூலம் அமெரிக்க மக்களுக்கு போன் செய்துள்ளனர்.

அப்போது, ’நாங்கள் அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவையிலிருந்து பேசுகிறோம் என்றும், தாங்கள் வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்றும் அதை கட்டத் தவறினால் குறைந்தது மூன்று மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும்’ என்றும் பலரிடம் கூறியுள்ளனர்.

இதை நம்பி அமெரிக்காவில் உள்ள மக்கள் பலர், தங்களது வரியை கட்ட ஒப்புக் கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்களிடமிருந்து அவர்களது மொத்த விபரங்களை அறிந்து கொண்டு, பணத்தை பெறுவதற்கு சர்வதேச பரிசு அட்டைகள் அல்லது ஐ டியூன்ஸ் மூலமாகத்தான் தங்களது வரியை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த தொலைத்தொடர்பு அழைப்பாளர்கள் அமெரிக்க மக்களிடம் இணையதளம் வழியாக செல்போனில் பேசும் செயலி மூலம் பேசி ஏமாற்றியுள்ளனர். இதன் மூலம் நாளொன்றுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றி பறித்துள்ளனர்.

இதில் மூன்று மையங்களிலுள்ள 70 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 700 பேர் தேடப்பட்டு வருகின்றனர். 772 பேர் காவல் விசாரணையில் உள்ளனர். டெலிகாலர்ஸ் பேசிய உரையாடல் பதிவுகள் அனைத்தையும் கைப்பற்றியுள்ளனர்.