Breaking News

இன்று வெளியாகிய “ரெமோ” படத்தினால் கோலிவுட்டில் சர்ச்சை !!

இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்க ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இன்று வெளியாகி உள்ளது ரெமோ திரைப்படம்.

இந்த படத்தினை பற்றி கோலிவுட்டில் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழக அரசின் வரி விலக்கு பெற வேண்டுமானால், படங்களின் டைட்டில் தூய தமிழில் இருக்கவேண்டும். அப்படி இல்லாத படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது.

அதனால், ஆங்கிலத்தில் பெயர் வைத்த எஸ்.எம்.எஸ், மாஸ் போன்ற படங்கள்…வரிவிலக்கிற்காக.. சிவா மனசுல சக்தி,மாசிலாமனி என்று டைட்டில் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால்,தமிழ் டைட்டில் இல்லாத ரெமோ வுக்கு தமிழக அரசு வரிவிலக்கு எப்படி அளித்தது என்று சர்ச்சை எழுந்துள்ளது .